டோனியை தேடி வந்த பதவி

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனிக்கு கல்ஃ ப் ஆயில் இந்தியா நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி பதவி வழங்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டோனியை கவுரவிக்கும் வகையில் கல்ஃப் ஆயில் நிறுவனம் இப்பதவியை வழங்கியுள்ளது.

இந்திய அணியின் மிகச்சிறந்த தலைவராக புகழப்படும் டோனி பல முக்கியப் போட்டிகளில் அணி வெற்றிபெறுவதற்கான வியூகங்களை வகுத்து வெற்றியை நிலை நாட்டியவர்.

இந்நிலையில் டோனிக்கு தலைமை செயல் தலைவர் பதவி அளித்துள்ளது கல்ஃப் ஆயில் இந்தியா நிறுவனம்.

1983ம் ஆண்டு உலகக் கிண்ணம் வென்ற இந்திய அணிக்கு 27 வருடங்கள் எட்டாக்கனியாக இருந்த கிண்ணத்தை டோனி தலைமையேற்று பெற்று தந்தார்.

ஏப்ரல் 2 , 2011 அன்று இலங்கையுடனான இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்று உலக கிண்ணத்தை கைப்பற்றியது.

ஆறு வருடங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் டோனியை கவுரவப்படுத்தும் நோக்கில் இப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக கல்ஃப் ஆயில் இந்தியா நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் டிக்கெட் பரிசோதகராக ஆரம்ப காலத்தில் பணியாற்றிய டோனி, இந்திய அணியின் தலைவராகி இன்று ஒரு பெரிய நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments