தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்த தொகுப்பாளினி ரம்யா!

Report Print Printha in ஏனைய விளையாட்டுக்கள்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினி மற்றும் நடிகையாக வலம் வரும் ரம்யா சுப்ரமணியன் தற்போது பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று தனக்கென்ற ஒரு அடையாளத்தை மீண்டும் பதித்துள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற மாவட்ட அளவிளான பளுதூக்கும் போட்டியில் பங்கேற்ற ரம்யா 80 கிலோ எடை பிரிவில் முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பதக்கத்துடன் இருப்பதை போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

இதேபோல் ரம்யா முன்னதாக மாநில பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்று, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments