லண்டன் விமான நிலையத்தில் பாகிஸ்தான் வீரருக்கு ஏற்பட்ட நிலை: உண்மையா?

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மொகமது அமீர் லண்டன் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியதற்கு அமீர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மொகமது அமிர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் லண்டன் சென்றுள்ளார்.

நேற்று இங்கிலாந்து நாடாளுமன்றம் அருகே தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. . இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் பிரபலமான ஹீத்ரோ விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகள், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொகமது அமிரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள் என்று செய்திகள் வெளியானது.

இதுகுறித்து மொகமது அமிர், தனது டுவிட்டர் பக்கத்தில், அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. நான் எனது மனைவி மற்றும் செல்ல மகளுடன் சந்தோஷமாக நேரத்தை கழித்து வருகிறேன் என்று தனது குடும்பத்துடன் கூடிய படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments