ஒரே அடி..ஒரே நொடியில் நாக் அவுட்! சரிந்த சுமோ வீரர்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

சுமோ மற்போர் மல்யுத்த போட்டியில் வீரர் ஒருவர் எதிராளியை ஒரே அடி, ஒரே நோடியில் எம்எம்ஏ பாணியில் நாக் அவுட் செய்து வெற்றிப்பெற்ற சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

ஜப்பானில் நடைபெற்ற சுமோ மற்போர் போட்டியில் 114 கிலோ Musashikuni Mamu, 110 கிலோ எடையுள்ள Tomisakaye Ryutaroவுடன் மோதினார்.

சுமோ மற்போர் விளையாட்டின் நோக்கம் எதிராளியை வட்டத்திற்கு வெளியே எறிய வேண்டும் என்பதாகும்.

Musashikuni Mamu, Tomisakaye Ryutaro இடையேயான போட்டியை நடுவர் தொடங்கி வைக்க ஒரே நொடியில் Musashikuni Mamu வெற்றிப்பெற்றார்.

நடுவர் போட்டியை தொடங்கிய அடுத்த நொடியே Musashikuni Mamu முழங்கையால் Tomisakaye Ryutaroவின் தாடையில் அடிக்கிறார். இதில் தடுமாறி கீழே விழுந்த Tomisakaye Ryutaro, எழுந்து நிற்க முடியாமல் தொடர்ந்து கீழே விழுந்துக்கொண்டே இருக்கிறார்.

இதனால், போட்டியில் Musashikuni Mamu வெற்றிப்பெற்றதாக நடுவர் அறிவிக்கிறார். தற்போது, இணையத்தில் வெளியாகியுள்ள நாக் அவுட் வீடியோவை 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments