ரசிகர்களிடம் கேள்வி கேட்ட கோஹ்லி: என்ன கேட்டார் தெரியுமா?

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் விராட் கோஹ்லி சமீபத்தில் ஷாப்பிங் சென்ற போது தனக்கு எந்த ஷு மற்றும் எந்த உடை நன்றாக இருக்கும் என்று இன்ஸ்டாகிராமில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய அணி தற்போது அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் டெஸ்ட் போட்டியின் தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி, இன்று காலை ஷாப்பிங் சென்றுள்ளார்.

அப்போது உள்ளே சென்ற அவர் கையில் ஒரு ஆரஞ்சு கலர் ஷு மற்றும் கருப்பு கலர் ஷு வைத்துக் கொண்டு இதில் எது நன்றாக இருக்கும் என்று ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அதே ஷாப்பிங் சென்டரில் மூன்று வகையான உடைகளை காண்பித்து அதில் எது நன்றாக இருக்கும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அதிலும் மூன்று வகையான உடைகளில் கருப்பு உடை நன்றாக இருக்கும் என்று தான் நினைப்பதாக கூறியுள்ளார்.

ஆனால் தான் உங்களின் பதிலுக்கு காத்துக்கொண்டிருக்கிறேன் என்று இன்ஸ்டாகிராமில் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்கள் பதில்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments