இந்தியா வந்த அவுஸ்திரேலிய வீரருக்கு இப்படி ஒரு ஆசையா? வைரலாகும் வீடியோ

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் கிளார்க் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுவது போன்ற வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அவுஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி பெங்களூருவில் வரும் 4 ஆம் திகதி நடைபெற உள்ளது.

Mastered the art of driving the tuk tuk 😜Nice to be back in Bengaluru where it all started 🏏

A post shared by Michael Clarke (@michaelclarkeofficial) on

இந்நிலையில் பெங்களூரு வந்துள்ள அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க், அங்குள்ள பகுதி ஒன்றில் ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் ஆட்டோ எப்படி ஓட்டுவது என்பது குறித்து அறிந்து, அதன் பின் ஆட்டோ ஓட்டிச் செல்வது தொடர்பான வீடியோவை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments