அரைகுறை ஆடையா? முகமது ஷமியை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய சானியா மிர்சா

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்
427Shares
427Shares
ibctamil.com

சமீபத்தில் முகமது சமி அவரது மனைவியுடன் இருக்கும் படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார்.

மதத்திற்கு எதிரான வகையில் முகமது சமியின் மனைவி ஆடை அணிந்திருந்ததாக விமர்சனங்கள் எழுந்தது,

இதற்கு என் மனைவியும் மகளும்தான் என் வாழ்க்கை. எனவே என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என பதிலடி கொடுத்திருந்தார்.

இதேபோன்று பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இவர் தன்னுடைய புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார், லட்சக்கணக்கான மக்கள் லைக் செய்திருந்தாலும் இஸ்லாம் முறைப்படி முக்காடு அணியவில்லை, உடலை முழுவதுமாக மறைக்கவில்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments