ஆளமாத்தி விமானத்தில் ஏத்திராதிங்கடா: தனியார் விமான நிறுவனத்தை கலாய்த்த சேவாக்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

டோனி புகைப்படத்தை மாற்றி பதிவிட்ட எமிரேட்ஸ் விமான சேவை இணையதளத்தை, எப்போதும் போல சேவாக் தனது குறும்புத்தனமான பதிவால் கிண்டல் அடித்துள்ளார்.

டோனி ஒரு நாள் மற்றும் டி20 போட்டி அணித்தலைவர் பதவியிலிருந்து விலகினார். இந்த செய்தி இந்தியா மட்டுமில்லாமல் கிரிக்கெட் போட்டிகளை ரசிக்கும் அனைத்து நாடுகளிலும் பெரிதும் கவனிக்கப்பட்டது. இதுகுறித்து பல்வேறு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் எமிரேட்ஸ் விமான சேவை இணையதளத்தில் டோனியின் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகிய செய்தி வெளியிட்டிருந்தது. இதில் டோனியின் புகைப்படத்திற்கு பதிலாக, டோனி திரைப்படத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புட்டின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது.

இதுகுறித்து சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் வழக்கம்போல் கலாய்த்திருந்தார். அதில், சேவாக்கை போல் உள்ள ஒருவர் இந்திய கிரிக்கெட் புளூ யூனிபார்ம் அணிந்து மட்டையை பிடித்து நின்றிருக்கும் ஒருவரின் படத்தை போட்டு, நான் சில நேரங்களில் எமிரேட்ஸ் விமானத்தில் பயணிப்பேன். என்னை போன்று உள்ள இவரை, நான் என நினைத்து விமானத்தில் பயணிக்க வைத்து விடாதீர்கள் என கிண்டலடித்துள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள எமிரேட்ஸ் விமான நிறுவனம். அதுபோன்ற தவறு நடக்காது. உங்களின் அடுத்த விமான பயணம் எங்களுடன் நடக்க வேண்டும் என்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறொம் என பதில் அளித்துள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments