2016 ஆம் ஆண்டு கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புகைப்படங்கள்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

உலக கிரிக்கெட் அரங்கில் ரசிகர்களால் மறக்க முடியாத கிரிக்கெட் போட்டிகள் நிறைய உள்ளன.

அதில் கடந்த 2016 ஆம் ஆண்டு ரசிகர்கள் மனதில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்த கிரிக்கெட் போட்டிகள் மற்றும் அதன் புகைப்படங்களைப் பற்றி பார்ப்போம்.

பாகிஸ்தான் vs இங்கிலாந்து (முதல் டெஸ்ட்)

இதில் இந்தாண்டில் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி போது, முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை பாகிஸ்தான் அணி வீரர்கள் அங்குள்ள மைதானத்தில் புஷ் அப் எடுப்பது போன்று வெற்றியை வெளிப்படுத்தினர்.

அது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவின.

அவுஸ்திரேலியா vs பாகிஸ்தான் (இரவு-பகல் டெஸ்ட் போட்டி)

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரவு, பகல் டெஸ்ட் போட்டி கபாவில் உள்ள பிரிஸ்பெனில் நடைபெற்றது.

இப்போட்டியின் போது ரசிகர்கள் அங்குள்ள சிறிய நீச்சல் குளம் போன்று வடிவமைக்கப்பட்ட தண்ணீரின் மீது துள்ளிக்குதித்து போட்டிகளை கண்டுகளித்தனர்.

அந்த இரவு நேர போட்டியின் போது இது தொடர்பாக எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் உலா வர ஆரம்பித்தது.

ஹைதராபாத் vs பெங்களூர் (ஐ.பி.எல்)

இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக ரசிகர்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் போட்டியாக மாறிவிட்டது ஐபிஎல்.

அப்படிப்பட்ட ஐபிஎல் போட்டியின் சாம்பியன் பட்டத்தை இந்தாண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தட்டிச் சென்றது. இந்த அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை இறுதி ஆட்டத்தில் வென்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி

மேற்கிந்திய தீவுகள் அணியால் இந்தாண்டை மறக்கவே முடியாது.

காரணம் மேற்கிந்திய தீவு அணியின் ஆண்கள் கிரிக்கெட் அணியினரும், பெண்கள் கிரிக்கெட் அணியினரும் டி 20 போட்டிக்கான உலகக்கோப்பைத் தொடர்களை வென்று அசத்தினர்.

அப்போது இரு அணியினரும் ஒரே மைதானத்தில் ஆட்டம் போட்ட புகைப்படம் தீயாய் பரவியது.

இந்தியா vs வங்காளதேசம் (டி 20 போட்டி)

இந்தியா, வங்கதேசம் மோதிய இந்த போட்டியை எந்த ஒரு கிரிக்கெட் ரசிகராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. உறுதியாக சொல்லலாம் இந்த ஆண்டின் சிறந்த டி20 போட்டி இது தான் என்று.

லீக் சுற்றில் பாகிஸ்தானை வென்ற பிறகு வங்கதேசத்தை சந்தித்தது இந்திய அணி. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா .

வங்கதேச பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் சராசரிக்கும் குறைவான ஓட்டங்களையே எடுத்தது இந்தியா. 147 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கியது வங்கதேசம்.

எந்த துடுப்பாட்டக்காரரும் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கட்டுப்படவில்லை, எளிதாக ஓட்டங்கள் வந்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ஓட்டங்கள் தேவை.

இறுதியில் 3 பந்துகளுக்கு 2 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இப்படிப்பட்ட பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு காரணமான டோனி, வங்கதேச வீரர் முஸ்தபிசூர் ரகுமானை ரன் அவுட் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் சமூகவலைத்தளங்களில் வெகுவாக பகிரப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments