அஸ்வினை வறுத்தெடுத்த ரசிகர்கள்: வைரலாகும் பதிவுகள்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்
653Shares

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் டோனிக்கு நன்றி தெரிவிக்காததால் டோனி ரசிகர்கள் சிலர் அவரிடம் கேட்ட கேள்விகள் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுக்கு இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது, சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது என இரு ஐசிசி விருதுகள் கிடைத்துள்ளன.

ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை பெறும் 3 ஆவது இந்திய வீரர் அஸ்வின் ஆவார். இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டில் ராகுல் டிராவிட்டும், 2010 ஆம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கரும் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

இது குறித்து அஸ்வின் கூறுகையில், இரட்டை விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சச்சின், டிராவிட்டுக்கு பின்னர் தனக்கு இந்த விருது கிடைத்திருப்பது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.

இந்த விருது பெற்றதற்கு ஏராளமானோர்க்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். இந்த விருதை தனது குடும்பத்தார்க்கு அர்பணிப்பதாகவும் மற்றும் சக வீரர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

டோனி ஓய்வு பெற்ற பிறகு ஏற்பட்ட வெற்றிடங்களை தாண்டி இளம் கேப்டனான கோஹ்லி தலைமையில் வலுவான அணியாக உருவெடுத்திருக்கிறோம். இந்திய அணி இப்போது சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றார்.

அதுமட்டுமின்றி டுவிட்டரிலும் இதே போன்று தன்னுடைய விருதை கோஹ்லி, கும்ப்ளே மற்றும் குடும்பத்தாருக்கு அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார்.

இதில் டோனியின் பெயரை குறிப்பிடுவதற்கு மறந்து விட்டார் போல் தெரிகிறது. அவ்வளவு தான் டோனியின் ரசிகர்கள் அஸ்வினை டுவிட்டரில் சில காரசாரமான கேள்விகளை எல்லாம் கேட்டுள்ளனர். அதில் ஒருவர் நன்றி மறப்பது நன்றன்று என்ற ரீதியிலும் டுவிட் செய்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments