இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார் சிந்து

Report Print Amirah in ஏனைய விளையாட்டுக்கள்

துபாய் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து கொரியாவின் சங் ஜி இடம் தேல்வியடைந்தார்.

பேட்மிண்டனில் உலகத் தரவரிசையில் முதல் 8 இடத்தில் இருக்கும் வீராங்கனைகளுக்கு இடையிலான சூப்பர் சீரிஸ் இறுதி தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் ‘பி’ பிரிவில் இடம் பிடித்திருந்த இந்தியாவின் பி.வி. சிந்து லீக் போட்டியில் இரண்டு வெற்றிகள் மூலம் அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்த தொடரின் காலிறுதியில் ரியோ தங்கை வீராங்கனை ஸ்பெயினின் கரோலின் மரினை, வீழ்த்திய இந்தியாவின் பி.வி.சிந்து, அரைறுதியில் கொரியாவின் சங் ஜியை எதிர்கொண்டார்.

இதன் முதல் செட்டை 15-21 என இழந்த சிந்து, தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டை,21-18 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில், வெற்றிக்காக போராடிய சிந்து, 15-21 என கோட்டைவிட்டார்.

முடிவில், இந்தியாவின் பி.வி. சிந்து, கொரியாவின் சங் ஜி இடம் 15-21, 21-18, 15-21 என தோல்வியடைந்து வெளியேறினார்.

இதனால் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பி.வி. சிந்து இழந்தார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments