கொலம்பிய விமானத்தில் பயணம் செய்து உயிர்தப்பிய மெஸ்ஸி! வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்

கடந்த மாதம் விபத்தில் சிக்கிய கொலம்பிய விமானத்தில் அர்ஜென்டினா கால்பந்து அணி வீரர்கள் பயணம் செய்து உயிர்தப்பிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் 28ம் திகதி தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியாவில் இருந்து கொலம்பியாவுக்கு 81 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

இந்த விமானத்தில் பிரேசிலின் சர்பிசியோன்ஸ் ரியல் கால்பந்து அணியை சேர்ந்த வீரர்களும் பயணம் செய்தனர்.

இந்நிலையில் விமானம் கொலம்பியாவின் மெடலின் அருகே வந்த போது அங்குள்ள மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.

நொறுங்கி விழுந்த விமானத்தில் பயணம் செய்த கால்பந்து வீரர்கள் உட்பட 76 பயணிகள் பரிதாபமாக பலியாகினர்.

இந்நிலையில் விமானம் விபத்தில் சிக்குவதற்கு 2 வாரத்திற்கு முன்பு இதே விமானத்தில் அர்ஜென்டினா அணி வீரர்களும் பயணம் செய்து உயிர்தப்பிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நவம்பர் 11ம் திகதி மெஸ்ஸி உட்பட அர்ஜென்டினா அணி வீரர்கள் இதே விமானத்தில் உலகக்கிண்ண தகுதிப் போட்டியை விளையாடி விட்டு பிரேசிலில் இருந்து அர்ஜென்டினா தலைநகர் பொயனஸ் அரைஸ்க்கு புறப்பட்டனர்.

விமானத்தில் எரிபொருள் முழுமையாக நிரப்பட்ட பிறகும் விமானத்தால் 4 மணி 22 நிமிடம் மட்டுமே பறக்க முடிந்துள்ளது.

சரியாக விமானம் தரையிறங்கும் போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இந்த விமானம் தான் நவம்பர் 28ம் திகதி விபத்தில் சிக்கி 76 பேரின் உயிரைப் பறித்துள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments