கார்டியாக் அரெஸ்ட்- 78 நிமிடங்கள் நின்று மீண்டும் துடித்த இதயம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

கார்டியாக் அரெஸ்ட் என்பது யாருக்கு எப்போது வேண்டுமானாலும் வரும் ஆபத்தான விடயமாகும்.

இதயத்தின் செயல்பாடு திடீரென நின்றுவிடும் நிலை தான் கார்டியாக் அரெஸ்ட் எனப்படுகிறது.

இதில் விளையாட்டு வீரர்கள், அதுவும் முக்கியுமாக கால்பந்து விளையாட்டு வீரர்களை இது அதிகம் பாதித்துள்ளது. இதுவரை உலகம் முழுவதிலும் 100க்கும் மேற்ப்பட்ட கால்பந்து வீரர்கள் இதனால் உயிரிழ்ந்துள்ளனர்.

கார்டியாக் அரெஸ்ட் எற்ப்பட்டு 78 நிமிடங்கள் நின்று போன இதயம் மீண்டும் இயங்கிய ஒரு அதிசய சம்பவம் காங்கோ நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஃபேப்ரீஸ் மூம்பாவுக்கு நடந்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி லண்டன் மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் ஃபேப்ரீஸ் விளையாடி கொண்டிருந்தார்.

விளையாடி கொண்டிருக்கும் போதே ஃபேப்ரீஸ் மைதானத்தில் கார்டியாக் அரெஸ்ட் ஏற்ப்பட்டு மயங்கி விழுந்தார். அவர் இதயம் துடிப்பது நின்றது.

உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும் சுமார் 78 நிமிடங்கள் மூம்பாவின் இதயம் துடிக்கவில்லை. ஆனாலும் மருத்துவர்களின் தொடர் சிகிச்சை முயற்சியால் அவர் இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது.

பின்னர் மெதுமெதுவாக அவர் உடல் நலம் தேற ஒரு மாதத்தில் மருத்துவமனையிலிருந்து முழு உடல் நலத்துடன் ஃபேப்ரீஸ் டிஸ்சார்ஜ் ஆனார்.

கால்பந்து இனி விளையாடக்கூடாது என்ற மருத்துவர்களின் ஆலோசனையை ஏற்று அதிலிருந்து பின்னர் விடைபெற்றார் ஃபேப்ரீஸ் மூம்பா.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments