இரண்டே நிமிடத்தில் பிராக் லெஸ்னர் கதையை முடித்த கோல்டுபர்க்: அதிர வைக்கும் வீடியோ

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்
1437Shares

12 வருடங்களுக்குப் பிறகு WWE திரும்பிய கோல்டுபர்க் இரண்டே நிமிடத்தில் பீஸ்ட் என்றழைக்கப்படும் பிராக் லெஸ்னர் கதையை முடித்த சம்பவம் வீடியோவாக உலகளவில் வைரலாகியுள்ளது.

இரு ஜாம்பவான்கள் மோதும் போட்டி அறிவிக்கப்பட்ட நாள் முதலே உலகம் முழுவதும் உள்ள ரெஸ்லிங் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருந்தது.

இந்நிலையில், 30வது ஆண்டு சர்வைவர் சீரிஸில் நடைபெற்ற கடைசி போட்டியில் இருவரும் மோதினர்.

மிகவும் கடுமையானதாக, சுவாரஸ்யமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போட்டி இரண்டு நிமிடங்களில் முடிந்தது.

ஆக்ரோசமாக செயல்பட்ட கோல்டுபர்க் இரண்டு ஸ்பியர், ஒரே ஒரு ஜாக் ஹேமர், பிராக் லெஸ்னர் கதையை முடித்தார். கோல்டுபர்க் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

பிராக் லெஸ்னர் ரசிகர்களுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. தற்போது, உலகம் முழுவதும் குறித்து போட்டியின் வீடியோ வைரலாகியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments