விமானத்தில் டோனி: செல்ஃபி எடுத்து குஷியான பிரபல நடிகை

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்
326Shares

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதில் இந்திய அணித்தலைவர் கோஹ்லி ஒரு புறம் அசத்தி வர, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட டோனி குடும்பத்தினருடன் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இந்நிலையில் பிரபல நடிகையான ஆண்ட்ரியா டோனியை தான் பயணித்த விமானத்தில் பார்த்துள்ளார்.

உடனே டோனி இருக்கைக்கு சென்று டோனியுடன் ஒரு செல்ஃபி எடுத்த அவர், அதை ‘என்னுடைய விமானத்தில் யார் இருக்கிறார் பாருங்கள்’ என்று எழுதி பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments