சச்சின் கொடுத்த காரை திருப்பி கொடுக்க முடியாது? ஒலிம்பிக் மங்கை தீபா கர்மாகர்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய வீரர் சச்சின் கொடுத்த காரை திருப்பி கொடுப்பது குறித்து யோசிக்க கூட முடியாது என ஒலிம்பிக் மங்கை தீபா கர்மாகர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரேசிலில் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் தீபா கர்மாகர் ஜிம்னாஸ்டிக் பிரிவில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒலிம்பிக் போட்டியில் 4 வது இடம் பிடித்தார்.

எனினும் இவருக்கு ஐதராபாத் பாட்மிண்டன் சங்கத்தலைவர் சாமுண்டேஷ்வரநாத் பரிசாக சொகுசு காரான BMW காரை பரிசாக வழங்கினார். அதுமட்டுமில்லாமல் சிந்து, சாஷி, சிந்துவின் பயிற்சியாளர் ஆகியோருக்கும் BMW கார் பரிசாக வழங்கப்பட்டது.

ரியோ ஒலிம்பிக்கிற்கான இந்திய அணியின் நல்லெண்ணத் தூதர் சச்சின், நால்வருக்கும் கார்களுக்கான சாவிகளை வழங்கினார். இந்நிலையில் நேற்று சச்சின் பரிசாக கொடுத்த BMW காரை திருப்பி கொடுக்கப்போவதாகவும், அதற்கு பதிலாக மற்றோரு கார் பெறப்போவதாகவும் தீபா கர்மாகரின் தந்தையார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சச்சின் பரிசாக கொடுத்த காரை திருப்பி கொடுப்பது குறித்து யோசிக்கவே முடியாது என தீபா கர்மாகர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments