முட்டை கோஸ் கொடுத்தால் கூட விக்கெட் எடுக்கும் அஸ்வின்? வைரல் வீடியோ!

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்று டெஸ்ட் போட்டிகள் தற்போது இந்தியாவில் நடைபெற்று முடிந்தது.

அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 13 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வினுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவருக்கு மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டதால் தொடர்நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இதைக் கண்ட இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசோக் டிண்டா அஸ்வின் தற்போது உள்ள நிலைமைக்கு முட்டை கோஸ் கொடுத்தால் விக்கெட்டை வீழ்த்திவிடுவார் என கிண்டலாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அஸ்வின் மகளானா அகிரா அஸ்வின் தொடர் நாயகன் விருது வாங்கும் போது சிறிது கூட கவனம் சிதறாமல் அப்படியே தொலைக்காட்சியைப் பார்த்து, அதன் பின்னர் கை தட்டிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Applause for appas MOS award. @rashwin99 #khaleesinotkanmani #babyA #akhira #indvsnz #99

A video posted by Prithi Ashwin (@prithinarayanan) on

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments