நம்ம ஸ்டார்ஸ் வைத்திருக்கும் ஸ்போர்ட்ஸ் கார்கள் எது தெரியுமா?

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் டிரைவிங் என்றால் மிகவும் பிடிக்கும்.

குறிப்பாக டோனி, ரெய்னாவுக்கு கொள்ளை பிரியம், இந்திய வீரர்கள் அனைவரும் சொகுசு கார்களில் அதிக சிறப்பம்சம் கொண்ட கார்களையே அதிகம் விரும்பி வாங்கியுள்ளனர்.

அதன் விலையோ விண்ணை முட்டும் அளவிற்கு இருக்கும். இவர்கள் அனைவருக்கும் கிரிக்கெட் போட்டிகளில் கிடைக்கும் தொகையை விட விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் தொகைகளே அதிகம்.

இவர்கள் நினைத்தால் போதும் எவ்வளவு பெரிய ஆடம்பர காராக இருந்தாலும், அடுத்த ஒரு மணி நேரம் இவர்கள் வீட்டில் வந்து நிற்கும்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் அண்மையில் BMW i8 என்ற சொகுசு காரை வாங்கியுள்ளார். அதன் வண்ணமோ சிவப்பு நிழல் போன்று இருக்கும். அது மட்டுமில்லாமல் இவருக்கு மிகவும் பிடித்த கார் Nissan GT-R அதற்கு புனைப்பெயராக Godzilla என சச்சின் வைத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. இதன் விலை 1.2 கோடி.

யுவராஜிசிங்குக்கு மிகவும் பிடித்தமான கார் Lamborghini Murcielago. அதைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு உலககிண்ணம் டி20 போட்டியில் 6 பந்துக்கு 6 சிக்ஸர் அடித்தற்காக BCCI இன் முன்னாள் துணைத் தலைவராக இருந்த லலித் மோடி கொடுத்த காரான Porsche 911 மிகவும் பிடிக்குமாம்.

தற்போது இந்திய அணியை கலக்கி வரும் விராட் கோஹ்லிக்கு Audi Q7 ரெம்ப பிடிக்குமாம். தற்போது அதைத் தான் உபயோகித்து வருகிறாராம்.

இந்திய வீரர் டோனியும், யுவராஜ் சிங்கும் ஒரே வகையான சொகுசு கார்களைத்தான் உபயோகிக்கிறார்கள். ஆனால் வண்ணம் மட்டும் தான் வேறு Porsche 911. அதைத் தவிர்த்து Hummer H2வும் டோனியிடம் இருக்கிறது. இதன் விலை 75 லட்சம்

தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி என்பது போல் சுரேஷ் ரெய்னாவும் Porsche பிராண்ட் கார் தான் உபயோகிக்கிறார். ஆனால் என்ன மாடல் மட்டும் தான் வேறு Porsche Boxster. இதன் விலை 1.02 கோடி.

இந்திய வீரர்களிலே அதிகம் கார் வைத்திருப்பவர் இந்திய அணியின் முன்னாள் வீரரான சவ்ரவ் கங்குலி தான். ஆனால் அவர் வீட்டில் எத்தனை கார்கள் இருந்தாலும் Mercedes-Benz CLK மிகவும் பிடித்ததாம்.

இவர்களை எல்லாம் மின்னல் வேகமாக செல்லும், அதாவது பறக்கும் என்று கூறுவார்களே Bentley Flying Spur அந்த வகையான காரைத் தான் முன்னாள் வீரர் சேவாக் வைத்திருக்கிறார். Bentley கார் பிரபலமான மற்றும் மிகவும் வெற்றிகரமான கார்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை 3.1 கோடி.

இந்திய வீரர் ரோகித் சர்மா BMW M5 என்ற ஸ்போர்ட்ஸ் காரை உபயோகிக்கிறார். இதன் விலை 1.39 கோடி.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments