ஜாம்பவான் முகமது அலியின் மறுபக்கம்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் 1942-ம் ஆண்டு பிறந்த முகமது அலியின் இயற்பெயர் காசியஸ் க்ளே.

தனது 18 வயதில் குத்துசண்டை களத்தில் இறங்கிய முகமது அலி 1960-ல் ஹெவிவெயிட் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை பெற்றார்.

இதைத்தொடர்ந்து குத்துச்சண்டை என்றாலே முகமது அலி என்று சொல்லும் அளவுக்கு புகழ்பெற்றார்.

இவரை பற்றிய சுவாரசியமான தகவல்கள்,

முகமது அலி நான்கு முறை திருமணம் செய்துள்ளார். அவருக்கு 7 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

முகமது அலி நாடு கடத்தப்பட்டிருந்த போது 'Buck White' இசைக்குழுவில் முக்கிய பாத்திரமாக இடம்பெற்றிருந்தார்.

தன் வாழ்நாளில் யாருக்கும் ஆட்டோகிராப் போட மறுக்க மட்டேன் என சிறுவயதிலேயே உறுதி பூண்டுள்ளார். அதற்கு முக்கிய காரணம் சிறுவயதில் பிரபல குத்துச்சண்டை வீரர் ரே ராபின்சன் முகமது அலிக்கு ஆட்டோகிராப் போட மறுத்ததே.

முகமது அலி ஐரிஷ் வம்சாவளியை சேர்ந்தவர். அவரது தாத்தா அபே கிரேடி ஐயர்லாந்திலிருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்துள்ளார்.

இனவெறிக்கு எதிராக போராடும் விதமாக 1960 ரோம் ஒலிம்பிக்கில் வென்ற தங்கப்பதக்கத்தை ஒரு பாலத்திலிருந்து எறிந்தார்.

முகமது அலியின் குத்துச்சண்டை கையுறைகள் 8,36,000 டாலர்களுக்கு வாங்கப்பட்டது.

குத்துச்சண்டையில் எற்பட்ட காயங்கள் காரணமாக அவர் பார்கின்ஸன் நோயக்கு ஆளானார்.

1/5

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments