டோனிக்கு பிடித்த பைக்- விலை என்ன தெரியுமா?

Report Print Abhimanyu in ஏனைய விளையாட்டுக்கள்

மகேந்திர சிங் டோனி பைக் மீது கொண்டிருக்கும் ஆர்வம் அனைவரும் அறிந்ததே. இதனை பற்றி சமீபத்தில் வெளியான டோனி திரைப்படமும் தெளிவுப்படுத்தியது.

இதில் அவருக்கு பிடித்தமான பைக் என குறிப்பிட்டு கூறினால் அது “ஜெட் பிளாக் ஹெல்கேட் எக்ஸ் 132” தான்.

5 கியர்பாக்ஸ் வசதியுடன் 2163cc திறன் கொண்டுள்ள இந்த பைக்கின் தற்போதைய பெறுமதி 49,500 டொலர் ஆகும்.

ஆனால் தோனி இந்த பைக்கை 2013ஆம் ஆண்டு “கான்ஃபெடெரேட் மோட்டார்ஸ் நிறுவனத்திடம்” இந்திய மதிப்பில் ரூ.28 லட்சத்திற்கு வாங்கியுள்ளார்.

மேலும் டோனியிடம் இந்த பைக்கைத் தவிர்த்து “என்பீல்டு மசிஸ்மோ, யமஹா தண்டர்கேட், யமஹா ஆர்.எக்ஸ்.இசட்-135, ஹேர்லி டேவிட்சன், யமஹா ஆர்.டி.350, டுகாட்டி 1098எஸ் மற்றும் கவாசகி நின் ஜா இசட் 14-ஆர்” உள்ளிட பல பைக்குகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

டோனியை தொடர்ந்து தவான் “சுசூகி ஜிஎஸ்.எக்ஸ் 1300”, பாகிஸ்தானின் அப்ரிதி “சுசூகி ஹயபுசா சுசூகி ஹயபுசா 2013” , அவுஸ்திரேலியாவின் கிளான் மெக்ராத் “டுகாட்டி மல்டிச்ட்ரேடா 1200 ” ,தென் ஆப்பிரிக்காவின் ஜாண்டி ரோட்ஸ் “ராயல் என்பில்டு கிளாசிக் 350” பைக்குகளை வைத்திருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments