எனக்கு இவரை சுத்தமாகவே பிடிக்காது: பிரபல கிரிக்கெட் வீரர் ஆதங்கம்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் காம்பீரை தனக்கு பிடிக்காது என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வந்தது.

அத்தொடரில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் காம்பீர் ஒரு ஓட்டம் எடுப்பதற்காக ஓடிய போது பாகிஸ்தான் வீரர் அப்ரிடி வழிமறித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்று சண்டை வரை செல்ல முயன்றது. இதை அங்கிருந்த நடுவர்கள் சுமூகமாக பேசி தீர்த்து வைத்தனர்.

இந்திய அணி உலக்கிண்ணம் வென்ற போது காம்பீர் இது மும்பை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமர்பிப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கூறியதாவது, காம்பீரின் கருத்து முட்டாள்தனமானது. இது போன்ற வார்த்தையை காம்பீரிடம் இருந்து சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும், மும்பை தாக்குதல் ஒரு அரசியல் எனவும் அதன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என தெரியுமா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இவை எல்லாம் முடிந்த பின்பு கடந்த 2013 ஆம் ஆண்டு ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தனக்கு பிடிக்காத இந்திய கிரிக்கெட் வீரர் காம்பீர் என அப்ரிடி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதற்கு நீங்கள் இருவரும் நண்பர்கள் தானே என்று கேட்டதற்கு, அதற்கு வாய்ப்பே இல்லை எனவும் பதில் அளித்திருந்தார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments