டோனி நீக்கிய அந்த மூன்று பேர் யார்? வெளியானது ரகசியம்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் வீரர் டோனி நீக்கிய அந்த மூன்று சீனியர் வீரர்கள் யார் என்கிற ரகசியம் தற்போது தெரியவந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றவர் டோனி. இவர் கேப்டனாக இருந்த போது இந்திய அணி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தமானது.

ஆனால் டோனி, இந்திய அணியில் இருந்த சில சீனியர் வீரர்கள் மீது அவ்வப்போது மறைமுகமாக குற்றம் சாட்டினார். இது ரசிகர்கள் உட்பட பலருக்கும் வெளிப்படையாக தெரியவந்தது.

தற்போது டோனி வாழ்வை சித்தரித்து வெளிவரவிருக்கும் படம் M.S.Dhoni The Untold Story. இப்படத்தில் டோனி மூன்று சீனியர் வீரர்கள் இந்திய அணிக்கு வேண்டாம் எனவும், அவர்கள் செட்டாக மாட்டார்கள் எனவும் தெரிவிப்பது போன்று அப்படத்தின் டிரைலர் வெளியானது.

ஆனால் இதை பலரும் பார்த்து விட்டு சேவாக், லட்சுமண், டிராவிட் என கூறினர். படக்குழுவினரோ கங்குலி, லட்சுமண், டிராவிட் என தெரிவித்தனர்.

இதற்கு இயக்குனர் நீரஜ் பாண்டே, வெறும் டிரைலரை வைத்து யூகிக்கவேண்டாம். முழுப்படத்தையும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments