பிரபல நடிகரின் நடத்தையால் அதிர்ந்துப்போன தீபா கர்மாகர்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியாவின் பறக்கும் மங்கை தீபா கர்மாகருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார்.

டெல்லியில் நடந்த நிகழச்சி ஒன்றில், ரியோ ஒலிம்பிக் மகளிர் ஜிம்னாஸ்டிக் வால்ட் பிரிவு இறுதிப்போட்டியில் நான்காவது இடம் பெற்ற இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் கலந்து கொண்டுள்ளார்.

சம்பவம் குறித்து தீபா கர்மாகர் கூறியதாவது, அந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சனை கண்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டேன்.

அதற்கு அவர் அளித்த பதிலோ, என்னுடன் 10 புகைப்படம் கூட எடுத்துக்கொள். உனக்காக 30 நிமிடங்கள் கூட காத்திருக்கிறேன். ஆனால், 2020 ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் நீ பதக்கம் வெல்ல வேண்டும் என கோரினார்.

மேலும், தீபா கர்மாகர் கூறுகையில், 2020 ஒலிம்பிக்கில் அமெரிக்க ஒலிம்பிக் சாம்பியன் Simone Biles வீழ்த்துவதே எனது குறிக்கோள்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் கண்டிப்பாக வெல்வேன் என தீபா கர்மாகர் உறுதியளித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments