படம் எப்படியிருக்கு? டோனி ஓபன் டாக்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் வீரர் டோனி தன் வாழ்வை சித்தரிக்கும் M.S.Dhoni - The Untold Story படம் எப்படி இருக்கிறது என கூறியுள்ளார்.

டோனி தலைமையிலான இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. டெஸ்ட் அணியில் நம்பர் 1, உலகக்கிண்ணம், டி20 உலகக்கிண்ணம், சாம்பியன் டிராபி என பல உள்ளது.

ஆனால் டோனியின் இந்த வெற்றிக்கு பின்னால் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நடைபெற்றது என்பதை விளக்கும் படம் தான் M.S.Dhoni - The Untold Story .

இப்படத்தை பார்த்த டோனி கூறுகையில், முதன் முதலாக எடிட் செய்யப்படாத திரைப்படத்தை பார்த்தேன். அவை அனைத்தும் என் வாழ்வில் நடந்த அனைத்து சம்பவங்களையும் திரும்பி பார்க்க வைக்கின்றன.

கிரிக்கெட் பற்றி என் பெற்றொரிடம் நான் ஒரு போதும் பேசியது கிடையாது. தற்போது தன் படத்தை பார்த்த பெற்றோர்கள் என்னை பற்றி என்ன நினைத்தார்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மற்றவர்கள் என்ன நினைத்தார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

நான் டைரக்டர் பாண்டேயிடம் ஒரு விஷயத்தை தெளிவாகக் கூறினேன், என்னை உயர்த்திப் பிடிக்கும், என் புகழ்பாடும் படமாக இது இருக்கக்கூடாது, ஒரு தொழில்பூர்வமான விளையாட்டு வீரனின் பயணத்தை சித்தரிப்பதாக இருக்க வேண்டும் என்றேன் அது போலவே படமும் வந்துள்ளது என டோனி கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments