பாகிஸ்தான் ரசிகர் கேட்ட கேள்வி: அஸ்வின் கொடுத்த பளார் டுவிட்!

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியின் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, அஸ்வின் அளித்த பதில் தான் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

பிரேசிலில் நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு பிரதமர், ஜனாதிபதி மற்றும் முக்கிய பிரபலங்கள் என பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதில் இந்திய கிரிக்கெட் விரர் அஸ்வினும் ஒருவர்.

தற்போது இந்தியா பதக்கம் வென்றதை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியின் ரசிகர் ஒருவர் 1.2மில்லியன் மக்கள் தொகை உள்ள இந்திய நாட்டில் 4 பதக்கங்கள் தான் பெற்றுள்ளனரா என அவரது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில், 1.2மில்லியன் மக்கள் தொகை உள்ள நாங்கள் 4 பதக்கம் பெற்று விட்டோம், உலக மக்கள் தொகையில் 6 வது இடம் பிடித்துள்ள, பாகிஸ்தான் நாடு இரண்டாவது பதக்கம் வெல்வதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தற்போது நடைபெற்று முடிந்த ரியோ ஒலிம்பிக்கில் ஒரு வெண்கல பதக்கம் தான் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments