திருப்பதி ஏழுமலையானுக்கு வெள்ளி மங்கை சிந்து என்ன நேர்த்திக் கடன் செலுத்தினார் தெரியுமா?

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்து, திருப்பதி ஏழுமலையானுக்கு தன்னுடைய எடைக்கு நிகராக வெல்லத்தை நேர்த்திக் கடனாக செலுத்தியுள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்துவுக்கு பல்வேறு வாழ்த்துக்கள் மற்றும் பரிசுகளும் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற சிந்து பல கோவில்களுக்கு சென்று வருகிறார், நேர்த்திக் கடனையும் நிறைவேற்றி வருகிறார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் ஹைதராபாத்தில் உள்ள சிம்மவாஹினி மாகாளி அம்மன் கோவிலுக்கு சென்று நேர்த்திக் கடன் செலுத்தினார்.

அது போல இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற அவர் தனது நேர்த்தி கடனை நிறைவேற்றியுள்ளார். அவர் திருப்பதி ஏழுமலையானுக்கு தன்னுடைய எடைக்கு நிகராக வெல்லத்தை அளித்துள்ளார்.

அதாவது தன்னுடைய எடையான 68 கிலோவுக்கு எடை நிகராக 68 கிலோ வெல்லம் நேர்த்திக் கடனாக செலுத்தினார்.

இதில் சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்தும் தனது நேர்த்தி கடனாக மொட்டை அடித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments