கற்பழிக்க முயன்ற இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகள்: பெண்ணின் திடுக் தகவல்

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வர்த்தக பிரிவின் செயலாளராக பணிபுரிந்து வந்த காயத்திரி விக்ரமசிங்க என்ற பெண்ணை கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

காயத்திரி, கிரிக்கெட் வாரியத்தின் தகவல்களை பத்திரிகைகளுக்கு வழங்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, அவர் தனக்கு நேர்ந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரிகள் சிலர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்ததாக காயத்திரி விசாரணை நடத்திய அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பணியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த காயத்திரி விக்ரமசிங்கவை மீண்டும் பணியில் சேர்க்க இலங்கை கிரிக்கெட் வாரியம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னர், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் விற்பனை பிரிவின் விற்பனை அதிகாரியாக பணிப்புரிந்த நவுச்சலி என்ற பெண்ணின் பணி ஒப்பந்த காலத்தை நீடிக்க அதிகாரி ஒருவரால் பாலியல் லஞ்சம் கோரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்து குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments