திருப்பதி ஏழுமலையானை தரிசித்த சிந்து

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பிவி சிந்து இன்று திருப்பதி ஏழுமலையான தரிசனம் செய்தார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த சிந்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் சிந்து அவரது தாய் விஜயா, தந்தை ரமணா மற்றும் பயிற்சியாளர் கோபிசந்துடன் நேற்று மாலை திருப்பதி வந்தனர்.

முதலில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார், அங்கு அவருக்கு பிரசாதங்களை வழங்கிய கோவில் அதிகாரிகள் மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர்.

தொடர்ந்து இன்று காலை சிந்து, அவரது பெற்றோர் மற்றும் பயிற்சியாளருடன் ஏழுமலையானை தரிசித்தார்.

சிந்து கூறுகையில், ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டதாகவும், அவரது அருள் கிடைத்ததால் வெள்ளி பதக்கம் வென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments