மன்மத லீலைகளால் கடுப்பான காதலியை சமாதானப்படுத்திய உசைன் போல்ட்

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்

உலகின் மின்னல் வேக மனிதர் என அழைக்கப்படும் உசைன் போல்ட். லண்டன் ஒலிம்பிக்கை தொடர்ந்து ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் 100, 200, 400 மீற்றர் ஓட்டப்பந்தயங்களிலும் தங்கம் வென்று சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில் தனது 30வது பிறந்த நாளை கொண்டாடிய போல்ட், நடன கிளப்பிற்கு சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் ஆபாச நடனம் ஆடுவது போன்ற காட்சி வெளியானது.

இதனையடுத்து ஒரு பெண்ணுடன் அவர் படுக்கையில் மிகவும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

படுக்கையை பகிர்ந்த அந்த பெண் ரியோ டி ஜெனிரோவை சேர்ந்த 20 வயதாகும் கல்லூரி மாணவி ஜேடி துர்தே என்பதும், அவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.

இதன் பின்னர் லண்டனில் உள்ள இரவு நேர கிளப்பிற்கு சென்ற போல்ட் 10 பெண்களுடன் விடியவிடிய கும்மாளம் போட்டுள்ளார்.

உசைன் போல்ட்டின் இந்த மன்மத லீலைகள் அவரது காதலியான மொடல் அழகி கசி பென்னட்டை கடுப்பாக்கியது.

இந்த நிலையில் சொந்த ஊருக்கு சென்றுள்ள உசைன் போல்ட் தனது காதலி கசி பென்னட்டை சமாதானப்படுத்தியுள்ளார்.

விடுமுறை நாட்களை தனது காதலியுடன் செலவிட திட்டமிட்டுள்ள போல்ட், “இதோ தொடங்கி விட்டது” என்று குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் காதலியுடன் இருப்பது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments