ஆடை சர்ச்சையில் சிக்கினார் வெள்ளி மங்கை சிந்து

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்

ரியோ ஒலிம்பிக் போட்டியின் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தற்போது ஆடை சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

இந்தியாவிற்கான அதிகாரப்பூர்வ ஸ்பான்சர் லின் நிங். இந்நிறுவனம் ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது இந்திய ஒலிம்பிக் கழகத்துடன் ரூ.3 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

ஆனால் சிந்து வெள்ளி பதக்கம் வெல்வதற்கான ரியோ ஒலிம்பிக் போட்டியில் யோனக்ஸ் ஆடையை உடுத்தி இருந்ததாகவும், பிற விளையாட்டு வீரர்களும் அந்நிறுவனத்தின் ஆடையை அணியவில்லை என புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இது தொடர்பாக லி நிங் நிறுவனத்தின் இந்திய விநியோகஸ்தர் மகேந்திர கபூர் இந்திய ஒலிம்பிக் கழகத்திடம் புகார் அளித்துள்ளார்.

தொடக்கத்தில் லி நிங் நிறுவன ஆடைகளை சிந்து அணிந்ததாகவும், பிறகு அடுத்தடுத்த போட்டிகளில் அதனை தவிர்த்ததாக கூறப்படுகிறது. இதற்கு லி நிங் நிறுவனம் அளித்த ஆடை நிறங்களை சிந்து உள்ளிட்ட வீரர்கள் விரும்பாததே காரணம் என கூறப்படுகிறது.

மேலும், சிந்து சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களையே தனது ராசியான நிறமாக கருதியதால் தான் பங்கேற்ற போட்டிகளில் அந்த நிற ஆடைகளை அணிந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments