சச்சின் பரிசளித்த BMW கார் வேண்டாம்! நிராகரித்த பதக்க நாயகி

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

ரியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாஷி மாலிக் சச்சின் கொடுத்த BMW காரை தான் பயன்படுத்த போவதில்லை எனவும், தன்னுடைய பழைய கார் தனக்கு போதும் எனவும் தெரிவித்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில்இந்திய சார்பில் சிந்துவும், சாஷி மாலிக்கும் பதக்கங்கள் வென்று சாதனைகள் படைத்தனர்.

இதில் வெண்கல பதக்கம் வென்ற சாஷி மாலிக்கிற்கு ஹரியான மாநில அரசு 2.5 கோடி ரூபாயும், டெல்லி அரசு 1 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கின.

இதை தொடர்ந்து ரியோ ஒலிம்பிக்கில் சாதித்த சிந்து, சாஷி மாலிக், தீபிகா கர்மாகர் மற்றும் சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோரை கெளரவப்படுத்தும் விதமாக ஹைதராபாத் பேட்மிண்டன் சங்கத்தலைவர் சாமுண்டேஷ்வர் அவர்களுக்கு BMW காரை பரிசாக வழங்க முடிவு செய்தார்.

ஆனால் இக்கார்களுக்கான சாவிகளை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு வழங்கினார்.

இந்நிலையில் சாஷி மாலிக் தான் BMW காரை பயன்படுத்தப்போவதில்லை எனவும், தன் கனவுக்கு பெரிதும் உதவியாகஇருந்த தந்தைக்கு இந்த காரை பரிசளிக்கப்போவதாவும், தன்னுடைய பழைய காரே தனக்கு போதும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments