கூகுளில் சாதனை படைத்த சிந்து

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்
கூகுளில் சாதனை படைத்த சிந்து
521Shares

இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் சமீபத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய வீராங்கனைகளில் சிந்துவுக்கு முதல் இடம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் உலகின் 6 ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நோஜோமி ஒகுஹாராவுடன் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மோதினார். இதில் ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து அவரை முதல் இரண்டு செட்களில் வீழ்த்தி இறுதி போட்டிக்குமுன்னேறினார். இந்தியாவுக்கு ஒரு பதக்கத்தையும் உறுதி செய்தார்.

இதனால்உலக மக்கள் அனைவரும் யார் இந்த சிந்து என கூகுளில் தேட தொடங்கியதே சிந்து முதல் இடம்பிடித்ததற்கு காரணமாக கருதப்படுகிறது

மேலும் மல்யுத்ததில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments