இந்தியாவின் தங்க கனவு தகர்ந்தது: சிந்துவை இறுதிப் போட்டியில் வீழ்த்தினார் கரோலினா

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்
987Shares

ரியோ ஒலிம்பிக் தொடரில் இன்று நடந்த பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் பி.வி. சிந்துவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின்.

நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி சிந்து, ஜப்பானை சேர்ந்த 6வது தரவரிசையில் உள்ள ஒகுகராவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

இதன் மூலம் ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமை பெற்றதுடன், வெள்ளிப் பதக்கத்தையும் உறுதி செய்தார்.

இந்நிலையில் இன்று தங்கப்பதக்கம் வெல்லும் கனவுடன் இறுதிப் போட்டியில் களமிறங்கினார் பி.வி. சிந்து.

அவர் இறுதிப் போட்டியில் உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான கரோலினா மரினை (ஸ்பெயின்) எதிர்த்து விளையாடினார்.

தொடக்கம் முதலே இருவருக்கும் இடையே கடுமையான போட்டி காணப்பட்டது. முதலில் நெருக்கடி கொடுத்த கரோலினாவை முதல் செட்டில் 21-19 என வீழ்த்தினார் சிந்து.

இந்நிலையில் 2வது செட்டில் ஆக்ரோஷமாக செயல்பட்ட கரோலினா 2வது செட்டை 21-12 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

இதனையடுத்து நடந்த 3வது மற்றும் கடைசி செட்டில் இருவருக்கும் கடும் போட்டி இருந்தது. இறுதியில் கரோலினா கடைசி செட்டை 21-15 எனக் கைப்பற்றி 2-1 என வெற்றி பெற்றார்.

இதன் மூலம் பி.வி.சிந்து தங்கம் வெல்வார் என்று எதிர்பார்த்த 120 கோடி இந்தியர்களின் கனவு தகர்ந்துள்ளது. இருப்பினும் சிந்து வெள்ளி பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments