ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த கிரிக்கெட் வீராங்கனை!

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்
314Shares

ரியோ ஒலிம்பிக் போட்டியில் தென்ஆப்பரிக்கா கிரிக்கெட் அணிக்காக விளையாடிய முன்னாள் வீராங்கனை சன்னெட்டே வில்ஜோன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற சன்னெட்டே வில்ஜோன், 64.92 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இவர் லண்டனில் கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் நான்காவது இடம்பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். ஆனால் தற்போது இவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.

அதேசமயம் குரோசியா வீராங்கனை 66.18 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.

சன்னெட்டே வில்ஜோன் தென்ஆப்பிரிக்கா மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணியில் கடந்த 2000ம் ஆண்டு இடம் பிடித்தவர். 2002ம் ஆண்டு வரை 17 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார்.

பின்னர் கிரிக்கெட்டிற்கு முழுக்கு போட்டுவிட்டு தடகளத்தில் ஆர்வம் காட்டினார். ஈட்டி எறிதல் போட்டியில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டவர். தற்போது ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

இதன்மூலம் கிரிக்கெட்டில் இருந்து தடகளத்திற்கு திரும்பி ஒலிமபிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் சன்னெட்டே வில்ஜோன்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments