அடித்தது ஜாக்பாட்: பி.வி.சிந்துவுக்கு சொகுசு கார் பரிசு

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்
682Shares

ரியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை உறுதி செய்துள்ள பி.வி.சிந்துவுக்கு பி.எம்.டபிள்யூ சொகுசு கார் பரிசாக வழங்கப்படும் என்று ஐதராபாத் பேட்மிண்டன் சங்க தலைவர் சாமுடேஸ்வர்நாத் தெரிவித்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் நேற்று நடந்த பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து 6ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நோஜோமி ஒகுஹாராவுடன் மோதினார்.

இதில் ஆக்ரோஷமாக விளையாடிய பி.வி.சிந்து, 21-14, 21-16 என்ற நேர் செட்களில் ஜப்பான் வீராங்கனை நோஜோமி ஒகுஹாராவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இதன் மூலம் இந்தியாவுக்கு 2வது பதக்கமாக தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளார். முன்னதாக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்றிருந்தார்.

இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பி.வி.சிந்துவுக்கு ஐதராபாத் பேட்மின்டன் சங்க தலைவர் சாமுடேஸ்வர்நாத் பி.எம்.டபிள்யூ சொகுசு கார் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இவர் ரியோ ஒலிம்பிக்கில் ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பதக்கம் வென்றால் சொகுசு கார் பரிசு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments