ரியோ ஒலிம்பிக்: இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம் உறுதி

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்
482Shares

ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பி.வி.சிந்து பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனையை வென்றதன் மூலம் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து கால் இறுதி போட்டியில் உலகில் இரண்டாம் நிலை வீராங்கனையான சீனாவின் வாங்யிகானை வென்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இதனால் இந்தியர்களின் ஒட்டு மொத்த பார்வையும் சிந்து மீது விழுந்தது. இந்நிலையில் விறுவிறுப்பான அரையிறுதி போட்டியில் உலகின் 6 ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நோஜோமி ஒகுஹாராவுடன் மோதினார்.

ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே ஆக்ரோஷமாக விளையாடிய சிந்து முதல் சுற்று மற்றும் இரண்டாவது சுற்றில் முன்னிலை பெற்றார். அதன் பின் ஆட்டத்தில் வேகம் காட்ட முயற்சித்த ஜப்பான் விராங்கனை சிறப்பான ஆட்டத்தை முறியடித்து 11-10 என்று முன்னிலை பெற்றார்.

தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய சிந்து இறுதி செட்டில் 10 புள்ளிகள் முன்னிலை பெற்று 21-10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதன் மூலம் அவர் 2-0 என வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ள சிந்து இந்தியாவுக்கு ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments