முகத்தை உடைத்து கொண்ட வீரர்! பறிபோனது பதக்க கனவு

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்
510Shares

ரியோ ஒலிம்பிக்கில் 3000 மீற்றர் தடைதாண்டும் போட்டியில் உகாண்டா வீரர் ஜாகன் அரப்டானி முகத்தை உடைத்துக் கொள்ள, அவரது பதக்க கனவு பாதியிலே நிறைவேறாமல் போனது.

தனது நாட்டிற்காக பதக்கம் வெல்லும் என்ற முனைப்புடன் தொடக்க முதலே முனைப்புடன் செயல்பட்டு வந்தார் ஜாகன் அரப்டானி.

3000 மீற்றர் தடைதாண்டும் தகுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டிக்கும் முன்னேறினார்.

இதன்படி நேற்று நடந்த 3000 மீற்றர் தடைதாண்டும் இறுதிப் போட்டியில் நாட்டிற்கு முதல் பதக்கம் வென்று கொடுக்கும் முனைப்பில் செயல்பட்ட ஜாகன் அரப்டானி மூன்றாவது இடம்பிடித்து வந்தார்.

இந்நிலையில் தடையை தாண்டும் போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவர் தனது முகத்தை தடையில் மோதிக் கொள்ள அப்படியே அதே இடத்தில் உறைந்து போனார்.

இதனால் மற்ற வீரர்கள் அவரை தாண்டிச் சென்றனர். காயத்தால் அவர் வெளியேற தனது நாட்டிற்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற அவரது ஆசை கனவாகவே போய்விட்டது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments