இதயத்தை நொறுக்கிய வீராங்கனை.. பிரித்தானியாவின் அதிரடி: ரியோ ஒலிம்பிக் துளிகள்

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்
529Shares
பிரித்தானியாவின் அதிரடி

ரியோ ஒலிம்பிக் தொடரில் மகளிர் ஹொக்கிப் போட்டியில் பிரித்தானியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

காலிறுதிப் போட்டியில் அலெக்ஸ் டாஸன் 2 கோல் அடிக்க, பிரித்தானியா, நியூசிலாந்தை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.

இந்நிலையில் தங்கப்பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில் பிரித்தானியா, நெதர்லாந்தை சந்திக்கிறது.

PA

அசத்தும் உசேன் போல்ட்

ரியோ ஒலிம்பிக்கில் 200 மீற்றர் ஓட்டத்திலும் தங்கம் வென்று உலக சாதனை படைக்கும் முனைப்பில் இருக்கிறார் உசேன் போல்ட்.

இன்று நடந்த 200 மீற்றர் ஓட்டம் அரையிறுதியில் அவர் 19.78 வினாடியில் ஓட்ட தூரத்தை கடந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

கடந்த இரண்டு ஒலிம்பிக்கிலும் 200 மீற்றர் ஓட்டத்திலும் அவர் தங்கம் வென்றிருந்தார். இறுதிப் போட்டி நாளை நடக்கவிருக்கிறது. ஒருநாள் இடைவெளி இருப்பதால் அவர் நாளை உலக சாதனை படைக்கும் நோக்கில் உள்ளார்.

AFP

ஜெஸ்டின் காட்லினுக்கு அதிர்ச்சி

ரியோ ஒலிம்பிக்கில் 200 மீற்றர் ஓட்டத்தில் உசேன் போல்ட் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், அமெரிக்க வீரர் ஜெஸ்டின் காட்லின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தார்.

காட்லின், உசேன் போல்டுக்கு சவால் கொடுக்க கூடிய வீரர் ஆவார். இவர் கடந்த 2005ல் உலகசாம்பின் பட்டம் வென்றார்.

தற்போது உலகின் 2வது வேகமான மனிதராக இருக்கும் காட்லின் அரையிறுதியில் தோல்வியை தழுவி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியாக உள்ளது.

அதே சமயம் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய உசைன் போல்ட் அணி வீரரான ஜமைக்காவின் யோகன் பிளக்கும் வெளியேற்றப்பட்டார்.

AFP

ஜமைக்கா வீராங்கனை சாதனை

ரியோ ஒலிம்பிக்கில் 200 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ள ஜமைக்கா வீராங்கனை எலைன் தாம்சன் 28 ஆண்டுகளுக்கான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

முன்னதாக அவர் 100 மீற்றர் ஓட்டத்திலும் தங்கம் வென்றிருந்தார். இன்று நடந்த இந்தப் போட்டியில் பிரித்தானியாவின் அதிகவேக மங்கை டினா ஆஸர் ஸ்மித் 5வது இடமே பிடிக்க முடிந்தது.

இது மிகவும் சிறப்பான தருணமாக அமைந்துள்ளதாக தெரிவித்த எலைன், சாதனையாளர்களான Veronica Campbell Brown, Shelly-Ann Fraser-Pryce ஆகியோர் வரிசையில் தனது பெயரை பார்க்க மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

AFP

தகர்ந்து போன சகோதரிகளின் கனவு

ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்க சகோதரிகள் 100 மீற்றர் தடை தாண்டும் போட்டியில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

ஆனால் சகோதரிகளான சிண்டி ஓஃப்லி, டிப்ஃனி போர்டர் ஆகியோரின் கனவு இறுதிப் போட்டியில் நனவாகவில்லை.

அமெரிக்க வீராங்கனை பிரியன்ன ரொலின்ஸ் தலைமையிலான அணி அவர்களை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில் கெண்ட்ரா ஹாரிசன் லண்டன் ஒலிம்பிக் சாதனையையும் முறியடித்தார்.

Getty

இதயத்தை நொறுக்கிய வீராங்கனை

ஒலிம்பிக் 5000 மீற்றர் தடகள ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை அபே அகாஸ்டினோ தவறி விழுந்து காயத்தால் வெளியேறிய சம்பவம் ரசிகர்களின் இதயத்தை நொறுக்கியது.

அதேபோல் அவர் தவறி விழும் போது நியூசிலாந்து வீராங்கனை நிக்கி ஹாம்ப்ளின் விளையாட்டு உணர்வால் அவரை தூக்கி விட்டு உதவிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தப் போட்டியின் முடிவில் முதல் 15 இடங்களை பிடிப்பவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவர். இந்த சம்பவத்தால் நிக்கி ஹாம்ப்ளின் 29வது இடமும், அபே அகாஸ்டினோ 30வது இடமும் பிடித்தனர்.

REUTERS

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments