12 வருட கடின உழைப்பிற்கு கிடைத்த பலன்: ஆனந்த கண்ணீரில் சாக்ஷி!

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்
594Shares

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க தாக்கத்தை தீர்த்து வைத்துள்ளார்.

இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்று பதக்கப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் பேசுகையில், கடைசி வரையிலும் நான் நம்பிக்கையை விடவில்லை, கடைசி சுற்றில் என்னுடைய அதிகப்படியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன், நிச்சயம் வெற்றிப்பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

12 வருடங்களாக இரவு, பகலாக உழைத்த கடினமான உழைப்பிற்கு கிடைத்த பலன் வெண்கலப் பதக்கம். ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் பதக்கம் வெல்லும் முதல் பெண்மணி ஆவேன் என்று நான் நினைக்கவே இல்லை.

இனி வரும் போட்டிகளில் மல்யுத்த வீரர்களும் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

சாக்ஷி மாலிக், ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற நான்காவது பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதற்கு முன்பாக பிரபல பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி (2000, சிட்னி), மேரி கோம் (2012 லண்டன்) சாய்னா நேக்வால் (2012, லண்டன்) பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments