ஒலிம்பிக்கில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய ஹொக்கி அணி

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்
489Shares

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஹொக்கியில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது இந்திய ஹாக்கி அணி.

ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹொக்கி போட்டியின் முதல் சுற்று நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு 15 வது நிமிடத்தில் ரகுநாத் முதல் கோல் பதிவு செய்தார்.

அடுத்து 27 மற்றும் 49 நிமிடத்தில் ரூபிந்தர்பால்சிங் இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். அயர்லாந்து அணி சார்பில் ஜெர்மைஜான் 45 வது நிமிடத்திலும், கனோர் கார்டே 56 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

இறுதியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, இந்திய சார்பில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

அடுத்த சுற்றில் இந்திய அணி வரும் 8ஆம் திகதி ஜேர்மனி அணியை சந்திக்கிறது .

மேலும் இந்திய சார்பில் டென்னிஸில் பெயஸ், போபண்ண ஜோடி முதல் சுற்றோடு வெளியேறினர், துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜித்து ராய் தோல்வியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments