ரியோ ஒலிம்பிக்கில் பிரான்ஸ் நாட்டு வீரருக்கு நேர்ந்த விபரீதம்!

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்
1094Shares

ரியோ ஒலிம்பிக்கில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீரருக்கு கால் முறிந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டில் ரியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர்.

அது போல ஆண்களுக்கான ஜிம்னாஸ்டிக் போட்டி ரியோ மாநகரில் நடைபெற்றது. இதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Samir Ait (26). தன்னுடைய திறமையை நிரூபிக்க வேகமாக ஓடிவந்து பெட்டகத்தின் மேல் ஏறி, கீழே வந்த போது யாரும் எதிர்பாராத வகையில், அவரது இடது காலின் முட்டி பகுதி முறிந்தது.


இதை அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் தொலைக்காட்சியில் கண்ட ரசிகர்கள் அனைவரும் சில நொடி அதிர்ச்சியடைந்து மௌனம் காத்தனர்.

அதன் பின்னர் அருகே பயிற்சி செய்து கொண்டிருந்த ஜேர்மன் நாட்டை சேர்ந்த Andreas Toba வேகமாக வந்து Samir Aitன் காலை பிடித்து உதவினார்.

இதை அரங்கத்தில் கண்ட ரசிகர்கள் அரங்கம் அதிர கத்தி உற்சாகப்படுத்தினர். விரைந்து வந்த மருத்துவர்கள் Samir Ait ஐ ஒரு ஸ்டிரக்சரில் வைத்து முதலுதவி கொடுத்து அழைத்து சென்றனர்.

மேலும் Samir Ait 2013 ம் ஆண்டில் European Championships ல் தங்கமும், 2015 ம் ஆண்டு Glasgow வில் சாம்பியன் பட்டமும் வென்றவர், இதனால் இந்த ஒலிம்பிக்கில் பிரான்ஸ் நாட்டிற்கு தங்கம் வென்று தருவார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் Samir Ait என்பவருக்கு இப்படி நடந்திருப்பது அந்நாட்டு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments