ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்கு முதல் தங்கம்

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்
358Shares

ரியோ ஒலிம்பிக்கில் நடைபெற்ற பெண்கள் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில் அமெரிக்கா முதல் தங்கம் வென்றுள்ளது.

பிரேசில் நாட்டில் ரியோ ஒலிம்பிக் போட்டி நேற்று கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது.

இதில் பெண்களுக்கான 10 மீற்றர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டிக்கான தகுதி சுற்று நடைபெற்றது. இச்சுற்றின் முடிவில் 8 வீராங்கனைகள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

இறுதி சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த Virgina Thrasher(19), சீனாவின் Lidu(34) ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் Virgina Thrasher 108 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

இவருக்கு கடும் போட்டி கொடுத்த Lidu 207 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கமும், அடுத்தபடியாக சீனாவை சேர்ந்த Yisiling(27) 185.4 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றனர்.

இரண்டாம் இடம் பிடித்த Lidu 2004 ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிபிடத்தக்கது

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments