ஆடைகளை களைந்து சோதனை: ஒலிம்பிக்கில் வீராங்கனைகள் சந்திக்கும் ”அக்னி பரிட்சை”

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்
484Shares

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீராங்கனைகளிடம் நடத்தப்படும் 'செக்ஸ் டெஸ்ட்’ அவர்களை தர்மசங்கட நிலைக்கு உள்ளாக்கியுள்ளது.

ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வீராங்கனைகள் உண்மைகள் பெண்கள் தானா என்ற 'செக்ஸ் டெஸ்ட்’ எனப்படும் சோதனை 1936ம் ஆண்டில் இருந்து நடந்து வந்தாலும், 1968க்கு பிறகே இது அதிகாரப்பூர்வமாக வெளியே சொல்லப்பட்டது.

இந்தியா போன்ற நாடுகளில் இருந்து ஒலிம்பிக்கில் பங்கேற்கும் பெண்களுக்கு தான் இந்த சோதனை பெரும் அக்னி பரிட்சையாகும்.

இந்த சோதனையில் க்ரோமோசோம் டெஸ்ட், டிஎன்ஏ டெஸ்ட் போன்றவை வீராங்கனைகளிடம் நடத்தப்படுகிறது.

இதற்கு முன்னதாக வீராங்கனைகள் நிர்வாணமாக்கப்பட்டு, அவர்களின் பெண் உறுப்புகள் 'தகுதிவாய்ந்த' நிபுணரால் சோதித்து பார்க்கப்பட்டு, அவர்கள் பெண்கள்தான் என்று உறுதி செய்யப்படும்.

ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக் கமிட்டியிடம் ஆய்வாளர்களும், வழக்கறிஞர் குழுக்களும், இந்த சோதனைகளை நிறுத்த கோரிக்கை விடுத்தும் அதை ஒலிம்பிக் கமிட்டி தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறது.

பெண்கள் பிரிவில் ஆண் தன்மை கொண்டவர்கள் விளையாடுவது அவர்களுக்கு அநீதி இழைப்பதற்கு ஒப்பாகும் என்று எண்ணும் ஒலிம்பிக் கமிட்டியின் இந்த சோதனையால் வீராங்கனைகள் மிகுந்த தர்மசங்கடத்தை சந்தித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments