ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஆடவர் தனிநபர் வில்வித்தை தரநிலை போட்டியில் தென்கொரிய வீரர் கிம் வூஜின் (Kim Woo-jin) புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் வில்வித்தை தனிநபர் பிரிவு தரநிலை சுற்று நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற தென்கொரியாவின் கிம் வூ ஜின் 720க்கு 700 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை மற்றும் ஒலிம்பிக் சாதனை படைத்தார்.
மேலும், இந்திய வீரர் அடானு தாஸ் (Atanu Das) 5வது இடம் பிடித்ததுடன் 32 வீரர்கள் அடங்கிய சுற்றில் போட்டியிட தகுதி பெற்றார்.
இது தரநிலை சுற்றுதான் என்பதால்பெரிய மகிழ்ச்சி இல்லை என்று கூறிய தென்கொரிய வீரர் கிம் வூஜின், பின்வரும் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்