நான் எங்கே இருக்கிறேன் தெரிகிறதா? சச்சின் வெளியிட்ட கலக்கல் புகைப்படம்

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்
219Shares

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஒலிம்பிக் போட்டிகளை காண பிரேசில் சென்றுள்ளார்.

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனீரோவில் இன்று 31வது ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியது.

இதில் கலந்து கொள்ளுமாறு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதனை ஏற்றுக் கொண்டு பிரேசில் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர், தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

’நான் எங்கே இருக்கிறேன் என்று தெரிகிறதா?, ஒலிம்பிக் திருவிழாவின் கோலாகலம் இந்த இடத்தை மேலும் அழகாக மாற்றியுள்ளது’ என டுவிட் செய்துள்ளார்.

மேலும், அங்குள்ள கடற்கரையோரம் தென்னை மர நிழலில் நின்று இளநீர் குடிப்பது போன்ற மற்றொரு புகைப்படத்தையும் அவர் டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments