முதல் நாள் முதல் ஷோ.. கபாலி படம் பார்த்து சிலிர்த்த சுரேஷ் ரெய்னா!

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்
முதல் நாள் முதல் ஷோ.. கபாலி படம் பார்த்து சிலிர்த்த சுரேஷ் ரெய்னா!
638Shares

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா ரஜினி நடித்து வெளிவந்திருக்கும் கபாலி திரைப்படத்தை முதல் நாள் முதல் ஷோ சென்று பார்த்துள்ளார்.

தற்போது வெளியாகியிருக்கும் திரைப்படமான கபாலியை ரசிகர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பார்த்து வருகின்றனர்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் என்பதால் அனைவரின் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதிய படி உள்ளது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான சுரேஷ் ரெய்னாவும் இந்த திரைப்படத்தை பார்த்து ரசித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்திலும் கருத்து தெரிவித்துள்ளார்.

அதேபோல் மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரரான ஷேவாக்கும் கபாலி திரைப்படத்தை பற்றி வித்தியாசமாக கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments