சாதனை படைக்க சிறுவனை கொடுமை செய்த போட்டி நடுவர்!

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்
903Shares

திருச்சியை சேர்ந்த 1 ஆம் வகுப்பு சிறுவனை சாதனை என்ற பெயரில் துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை சேர்ந்த சிறுவன் சஞ்சய்(6), என்ற சிறுவன் ஏற்கனவே, இந்திய புக் ஆப் மற்றும் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய புத்தகங்களில் 60 மீற்றர், கால் விரல்களை மடக்கியபடி நடந்து சாதனை படைத்துள்ளான்.

இதனால் சஞ்சய் சாதனை புத்தகத்தில் இடம் பெற கேம்பியன் பள்ளியில் 200 மீற்றர் தூரம் காலை மடக்கி நடக்க ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சிறிது தூரம் சென்றவுடன் சஞ்சய் நடக்க முடியாமல் அழுதுள்ளான்.இருந்தாலும் போட்டியின் நடுவரான ஜெட்லி என்பவர் அவரை விடாமல் நடக்குமாறு கூறியுள்ளார்.

மேலும் சஞ்சய் வலிதாங்காமல் அழுது கொண்டே 130 மீற்றருக்கு மேலாக நடந்து சென்று வலிதாங்காமல் அந்த இடத்திலேயே நின்று விட்டான்.

நின்றதும் சஞ்சயின் கால் விரல்களை பார்க்கும் போது தோல்கள் உரிந்து,ரத்தம் கசிந்தபடி இருந்தன. இதனால் சஞ்சயை பார்த்து பார்வையாளர்கள் பரிதாபமடைந்தனர்.

மேலும் இப்போட்டி திருச்சி குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் மோகன் முன்னிலையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments