இரண்டு குட்டியானை எடையை தூக்கும் ஈரானியன் ஹல்க்: வைரலாகும் புகைப்படம்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்
1375Shares

ஈரான் நாட்டை சேர்ந்தவர் Sajad Gharibi வயது 24, இணையத்தில் பெர்ஸியன் ஹெர்குலஸ் என அறியப்படுபவர்.

இவரின் எடை 152 கிலோ, இதற்கு முக்கிய காரணம் இவரின் கட்டுமஸ்தான தசைகள் தான்.

படத்தில் வரும் ஹல்க் போல தோற்றம் கொண்டுள்ள Sajad Gharibi , Instagram சமூக வலைதளத்தில் 59,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார்.

152 எடை கொண்டுள்ள இவர், சுமார் 175 கிலோ கிட்டதட்ட இரண்டு குட்டியானைகளின் எடையை தூக்கும் வல்லமை படைத்தவர்.

Sajad Gharibi தினமும் பளு தூக்குதலுக்காக மேற்கொள்ளும் பயிற்சியை புகைப்படமாக எடுத்து, அதை சமூக வலைதளத்தில் பதிவு செய்து தன்னை பின்தொடர்பவர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த பெரும் மனிதர் அவரது நாட்டிற்காக பளு தூக்குதல் மற்றும் ஆண் அழகன் போட்டியில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் இவரின் கட்டுமஸ்தான தசைகளை கண்ட பலர், இவரை ஹல்க், ஹெர்குலஸ் என புனைப்பெயர் வைத்து அழைத்து வருகின்றனர்.

அதிகரித்து வரும் பின்தொடர்பவர்களின் மூலம் ஈரானியன் ஹல்க் தற்போது இணையத்தில் பிரபலமடைந்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments