இந்திய குத்துச்சண்டை நட்சத்திர வீராங்கனை மேரி கோம், சிறப்பு அனுமதி மூலம் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில், அவர் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.
இந்திய குத்துச்சண்டை சங்கத்தின் தலைவர் கிஷன் நர்ஸி வெளியிட்டுள்ள தகவலில் , ரியோ ஒலிம்பிக்கில் சிறப்பு அனுமதி மூலம் மேரிகோம் பங்கேற்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேரிகோம் கூறியதாவது, சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் சிறப்பு அனுமதி வழங்கப்படாததைஅறிந்தும் எனது இதயம் நொறுங்கி விட்டது, எனினும் இந்த முடிவை நான் ஏற்றுக்கொகிறேன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தற்போதைக்கு குத்துச்சண்டை களத்திலிருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான கடைசி வாய்ப்பாக கஜகஸ்தானில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில்,மேரிகோம் 2-வது சுற்றில் தோல்வியடைந்தார்.
இதனால்அவரால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை.கடந்த லண்டன் ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச் சண்டை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று மேரிகோம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது நினைவுகூரத்தக்கது.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்