நீச்சல் உடையில் நெய்மருடன் போஸ் கொடுத்த செரீனா வில்லியம்ஸ்: வைரலாகும் புகைப்படம்

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்
நீச்சல் உடையில் நெய்மருடன் போஸ் கொடுத்த செரீனா வில்லியம்ஸ்: வைரலாகும் புகைப்படம்
1896Shares

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மருடன் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.

தற்போது அமெரிக்காவில் கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இருந்து பிரேசில் அணி வெளியேறியுள்ளது.

இந்நிலையில் பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர் கடந்த வாரம் லாஸ் வேகாஸில் உள்ள பீச் கிளப்பிற்கு சென்றிருந்தார்.

அப்போது அங்கு அமெரிக்க டென்னிஸ் சூறாவளி செரீனாவும் வந்திருந்தார். இருவரும் நீச்சல் உடையில் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த புகைப்படத்தை செரீனா வில்லியம்ஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக மாறி வருகிறது.

Always be ready for summer. You never know when. @neymarjr will show up

A photo posted by Serena Williams (@serenawilliams) on

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments